மட்டக்களப்பில் பாதையைப் (Ferry Boat) பயன்படுத்தி ஆற்றை கடக்கும் சந்தர்ப்பங்கள். (26/11/2019)

1. குருமன்வெளி - மண்டூர்
2. குருக்கள்மடம் - அம்பிளாந்துறை
3. மண்முனை - மகிழடித்தீவு (பாலம் கட்டியமையால் தற்போது பாதை அங்கு இல்லை ஆனால் பாதை ஓடிய துறையை காண முடியும்)
4. நாவற்குடா - எருமைத் தீவு ( முன்னைய காலங்களில் எருமைத் தீவுக்கு உழவு இயந்திரம் மற்றும் மக்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. தற்போது மக்களை ஏற்றிச்செல்ல தோணிகள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.)
5. புளியந்தீவு - எருமைத் தீவு (பெரும்போக வேளாண்மை காலத்தில் உழவு இயந்திரம் ஏற்றிச்செல்ல உபயோகிக்கப்படுகிறது)
6. சித்தாண்டி - சந்தனமடுஆறு (இரு தோணிகளை ஒன்றாகப் இணைந்து அதன் மூலம் ஆற்றை கடக்கிறார்கள்)
7. முறக்கொட்டான்சேனை - திகிலிவெட்டை (இரு தோணிகளை ஒன்றாகப் இணைந்து அதன் மூலம் ஆற்றை கடக்கிறார்கள்)
8. சந்திவெளி - திகிலிவெட்டை
9. கிண்ணையடி - முருக்கன் தீவு. (இரு தோணிகளை ஒன்றாகப் இணைந்து அதன் மூலம் ஆற்றை கடக்கிறார்கள்)
வேறேதும் விடுபட்டிருப்பின் பட்டியலில் இணைக்கவும்







"நம் ஊரை நாமறிவோம்" எனும் வட்சப் குழு இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் மட்டக்களப்புடன் தொடர்புடைய இடங்கள், படங்கள், ஆய்வுகள் போன்றவை பகிரப்பட்டுகொண்டு இருக்கின்றன. இணைய விரும்பினால் மட்டக்களப்பு நண்பர்கள் மட்டும் "நம் ஊரை நாமறிவோம்" என தட்டச்சு செய்து பெயர் விபரங்களுடன் 0766656007 எனும் வாட்சப் இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பவும்.

Comments

Popular Posts