கரப்பு முறை மீன்பிடி

நாம் பயன்படுத்திய பாரம்பரிய மீன்பிடி தொழினுட்பங்களில் கரப்பு பயன்படுத்தி மீன்பிடித்தலும் ஒன்றாகும். இதனை இலங்கையில் மட்டக்களப்பு தேத்தாத்தீவில் தற்போதும் பயன்படுத்துகிறார்கள். குழுவாக சென்று மீன் பிடிக்கும் முறையாக இது காணப்படுகிறது. ஒரு குழுவில் 12-20 பேர் வரையில் காணப்படுவர். ஆறு,குளம்,குட்டைகளில் மீன் பிடிப்பதட்காக மட்டும் இதனை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செய்வதட்காக ""முள்புல்லாந்தி"" எனும் தாவர தண்டு பயன்படுத்தப்படுகிறது. ஓர் கரப்பு செய்வதற்கு 105 தண்டுகள் தேவைப்படும். செய்த கரப்பு ஒன்று 2000 ரூபாய் வரை விலை போகும் .




Comments

Popular Posts