கரையாக்கன்

  • யார் இந்த கரையாக்கன்?
நீர்நிலைகளில் தன் இராட்சியத்தை நடத்தும் ஒரு சக்தியின் பெயர் தான் இந்த கரையாக்கன். சக்தி என்று சொல்வதை விட பேய் என்று சொல்வதே சரியாக அமையும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில் இந்த கரையாக்கனில் தெய்வத்துக்கு உவப்பான அம்சங்கள் கரையாக்கனில் இல்லை. உரு ஏற்றினால் ஆடாது , வாக்கு சொல்லாது.

அம்மாவின் பெயர்: இழுத்தம்மா எனவும் அப்பாவின் பெயர் : அப்புச்சி எனவும் கூறப்படுகிறது. இந்த கரையாக்கனில் 21 கலைகள் இருப்பதாக மந்திரங்களில் கூறப்படுகிறது. அனால் அதில் 7 பெயர்கள் திருத்தமாக கூறப்படுகிறது மற்றைய 14 பெயர்களும் இதுவரையில் தெரியாத புதிராகவே உள்ளது.
வட்டயாக்கன், நெட்டையாக்கன் , துரும்பறையன், இளங்கநாயகா, கொத்தியாதி, கரையாக்கன், தும்பரவைரவர்  எனும் பெயர்கள் மந்திரங்களில் கரையாக்கனின் கலைகளாக குறிப்பிடப்படுகிறது.
  • எப்படி இதை அழைத்து வேலை செய்ய வைப்பது ?
கரையாக்கன் இலையை எடுத்து கரையாக்கன் பூவுடன் சேர்த்து மருந்து அல்லது வாடை போல் அரைத்து அதை மடை வைத்து கடலில் இருக்கும் தெய்வங்களையும் அழைத்து மணலை அல்லது கயமீன் சுட்டு நெத்தலி அல்லது கீரி மீன் சேர்த்து நீரில் விட்டால் அது மீனை கூட்டி வரும். கடலில் போகும் என்ன மீன் என்றாலும் வந்து படும். ஒரு தடவை மடை வைத்தால் சராசரியாக வருடம் முழுவதும் தொழில் நடக்கும் .
  • இவ்வாறு பிடிக்கப்பட்ட மீனை உண்டால் ஏதும் நோய்கள் வருமா?
இம்முறையில் பிடிக்கப்பட்ட மீனை உண்பதால் உண்பவர்களுக்கு பிரச்சனை எதுவும் வராது. ஆனால் மீன் பிடிப்பவருக்கு இதனால் உடனடி பாதிப்புகள் இல்லாவிடினும் காலம் செல்ல செல்ல பாதிப்புகள் உண்டாகும். மீனவர் ஒவ்வொரு நாளும் இரை கொடுக்க வேண்டும் இல்லாவிடின் அது மீனவரையே இரையாக்கி கொஞ்சம் கொஞ்சமாக  அவரை உருக்குலைக்க தொடங்கும்.
  • கரையாக்கன்  பிடித்தால் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்?
கை , கால் குத்துவலி, வயிறு வீங்குதல் , கால் பெருத்தல் , இரவில் 12-1 மணி அளவில் எழுப்புதல், இந்த அறிகுறிகள் இருந்தால் கரையாக்கன் ஒருவரின் உடம்பில் இருப்பதாக அர்த்தப்படும்.
  • கரையாக்கனை விலக்குவது எப்படி ?
நீர்நிலைகளின் அருகில் மடை வைத்து கரையாக்கன் மந்திரம் சொல்லி தேங்காய் வெட்டி மணலை அல்லது கயமீனை இரையாக கொடுத்து "பாலசுப்பிரமணியர் ஆணை இவரை விட்டு விலகிப்போ" எனக்கூறும் போது கரையாக்கன் அந்த மனிதரை விட்டு விலகிப்போகும்.

Comments

Popular Posts