காலைல எழும்பி கடலுக்கு போன சந்தோசத்தில கொஞ்சம் கவலை (28/11/2019)





இரண்டு நாட்களுக்கு முன் கல்லடியில் கடற்கரைக்கு காலை ஐந்து முப்பது மணி அளவில் சென்றிருந்தேன். (முதல் வரி வாசிச்சதுமே இவன் புளுகுறான் என்று நினைச்சிருப்பீங்க பறவால்ல கொஞ்சமா நம்புங்க) அங்கே கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தமையால் மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை என்பதை அறிய முடிந்தது. சரி வந்ததுதான் வந்தோம் வந்ததுக்கு இரண்டு போட்டோ எடுத்துட்டு போவம் என்று கடலன்னையின் அழகையும் சூரியனின் எழுகையையும் பார்த்தபடியே சில புகைப்படங்களை அன்றைய நாளுக்காக பதிவு செய்தேன்.

கடல் என்றுமில்லாதவாறு அன்று மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. கல்லடியில் இருந்து பார்த்தால் மற்றய நாட்களில் பூனோச்சிமுனையில் தரித்து இருக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளை தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் அன்றைய தினம் 50 மீட்டர் தூரம் கூட தெளிவாகப் பார்க்க முடியவில்லை. வளியில் அவ்வளவு நீர்ப்புகார்கள் நிரம்பியிருந்தது.

சரி கடலில் தான் ஒன்றும் தெரியவில்லை நிலத்திலுள்ளவற்றையாவது பதிவுசெய்வோம் என நினைத்து கமராவை திருப்பினால் ஏன்டா இங்கால திருப்பினம் என்ற போல இருந்திச்சி எங்கால திருப்பினாலும் ஒரே குப்பை. அதுவும் பிளாஸ்டிக் போத்தல்களும் ஐஸ்கிரீம் குவளைகளும் தான் அதிகமாக (90%) காணக்கிடைத்தது.

இவை ஒன்றும் கடலால் அடித்து வந்து கரையொதுக்கப்பட்ட பொருட்கள் அல்ல என்பதை மனதில் வைத்து இத்தருணத்தில் யோசனை ஒன்றை பதிவிட முற்படுகிறேன்.

1. கடற்கரைக்கு வருபவர்கள் எல்லா இடங்களிலும் குப்பைகளை போடாமல் அவற்றை குப்பை போடுவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் போடலாம்.
2. நீங்கள் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் வாடி பகுதிகளில் குப்பை போடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர மற்றைய இடங்களில் குப்பை போடுபவர்களை வாடிக்காரர்கள் குப்பைகளை உரிய இடத்தில் போடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தலாம்.
3. மாதத்தில் ஒரு தடவை மீனவசங்கங்களின் ஒத்துழைப்புடன் மாநகரசபையும் சமூக சேவை அமைப்புகளும் இணைந்து சிரமதானம் செய்வதுடன் நின்றுவிடாமல் மக்களுக்கு பிளாத்திக்கு கழிவுகளால் கடல்வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி விழிப்புணர்வூடும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

மற்றும்படி வருடத்துக்கு இரண்டு தடவை சமூக சேவை அமைப்புகள் செய்யும் சிரமதானம் எமது கடல் வளத்தை பாதுகாக்க முழுமையாக உதவாது.

சமூக வலைத்தளங்களில் பகிரும் யோசனைகள் மற்றும் கருத்துக்கள் செல்லாக்கசு தான் என்பதை நீங்கள் வாசித்துவிட்டு கடந்து சென்ற மறுநிமிடம் உணர்வீர்கள்.
இது தெரிந்தே இதனை பொதுவெளியில் பகிர்கிறேன்.

இப்படிக்கு..
முட்டாள் #மட்டுநகர்_திவா

"நம் ஊரை நாமறிவோம்" எனும் வட்சப் குழு இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் மட்டக்களப்புடன் தொடர்புடைய இடங்கள், படங்கள், ஆய்வுகள் போன்றவை பகிரப்பட்டுகொண்டு இருக்கின்றன. இணைய விரும்பினால் மட்டக்களப்பு நண்பர்கள் மட்டும் "நம் ஊரை நாமறிவோம்" என தட்டச்சு செய்து பெயர் விபரங்களுடன் 0766656007 எனும் வாட்சப் இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பவும்.



Comments

Popular Posts