மர்மமாக இசை மீட்டும் மட்டக்களப்பு வாவி


மர்மம் என்னும் சொல்லானது oxford dictionary க்கு இணங்க ‘ஒரு விடையத்தினை விபரிப்பதற்கு அல்லது விளங்குவதற்கு கடினமானதாகவும் சாத்தியமற்றதாகவும் உள்ளது’ எனவரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை வெளிப்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். இங்கு சொல்லப்படும் மர்மமானது மட்டக்களப்பின் சின்னமாக கருதப்படும் மட்டக்களப்பு வாவியின் மிக விசேடமான பாடும் திறமை ஆகும்.
இவ் வாவியானது 56மஅ நீளமுடையது. வடக்காக ஏறாவூர்(மட்டக்களப்பு மாவட்டம்) தொடக்கம் தெற்கில் கல்முனை(அம்பாறை மாவட்டம்) வரையும் நீண்டுள்ளது. வாவி என்பதை வரையறுப்பதற்காக அது கடலுடன் கலக்கின்றது. மட்டக்களப்பு வாவியானது 200அ விஸ்தீரமான இரண்டு குறுகிய இடங்களில் திறக்கின்றது.  இதில் ஒன்று வாவியின் தெற்கு முனையில ;உள்ளது. இது ஓந்தாச்சிமடம், கல்லாறில் இரு கிளைகளைக் கொண்டுள்ளது. மற்றையது வாவியின் மத்திய பகுதியில் மட்டக்களப்பு நகருக்கு அருகிலுள்ள பாலமீன்மடுவில் உள்ளது.
வரலாற்றில் இந் நிகழ்வானது Britannica Encyclopedia இல் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சரியான ஆவணப்படுத்தல் 1840ற்குப் பிறகு தொடங்கியது. உள்நாட்டு மக்கள் இதற்கு முதலே இந் நிகழ்வை நன்றாக அறிந்திருந்தனர். 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டின் முன்னைய காலப்பகுதியில் பல்வேறுபட்ட மக்கள் இந் நிகழ்வைப்பற்றிய ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டினர். இதில் Jesuit missionary களும் உள்ளடங்குவர். இயற்கையில் ஈடுபாடுடைய ஜப்பானைச் சேர்ந்தவர்களும் இந் நிகழ்வின் அனுபவத்தைப் பெற இங்கு வருகை தந்தனர். இந் நேரத்தில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் சுவாமி விபுலானந்தரும் இந் நிகழ்வில் தமது முக்கிய நேரத்தை செலவழித்துள்ளார். உள் நாட்டைச்சேர்ந்த இயற்கை ஆர்வலரான Mr.S.V.O.Somanadar மேற்கிலிருந்த நிபுணர்களுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொருநிகழ்வின் போதும் இச்சத்தத்தின் விவரணை சமமாகவே இருந்துள்ளது.
இவ் ஆய்வில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் இந் நிகழ்வை ஒரு விசேட நிகழ்;வாகவே குறிப்பிடுகின்றனர். ஏனெனில் இது நீரினுள் இருந்து வருவதனாலும் வாவியின் குறிப்பிட்ட பகுதிகளில் மாத்திரம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கேட்கக்கூடியதுமான ஒரு சங்கீதமாக இருப்பதனாலும் ஆகும்.
1800ல் ஆவணப்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து இதை சங்கீதமாக கருதினார்கள். 1845ல் Sir James Emerson Tennot இதை மட்டக்களப்பின் சங்கீத மீன்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். தண்ணீரில் இருந்து எழுந்த இச்சத்தத்தை தெளிவாகக் கேட்டதாகவும் , இது நாண்களின் இதமான அதிர்வை அல்லது வைன் கோப்பைகளின் ஓரங்களை குளிர் கரங்களால் தேய்க்கும் போது தோன்றும்  வலுவற்ற அதிர்வை ஒத்ததாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது ஓர் உறுதியற்ற இராகம் எனவும் இங்கு தமக்குள்ளே முற்றிலும் வேறுபட்ட, தெளிவான அதிக எண்ணிக்கையான ஓசைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Lord Holden என்பவர் தமது ஆய்வு புத்தகத்தில் இச் சத்தத்தை வயலின் ‘G’ நாணின் ஓசையை நினைவுபடுத்தியதாக கூறியுள்ளார். மேலும் , இச் சத்தங்களிற்கும் சங்கீத உபகரணங்களின் சத்தங்களிற்கும் ஒற்றுமை உள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.
Mr.Stanly Green என்பவர் இவ் ஓசையானது cello என்னும் இசை உபகரணத்தின் இராகத்தை ஒத்ததாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Rev Fr. Lange என்பவர் இவ் ஓசையை ஈக்கள், வண்டுகளின் ரீங்காரம் மற்றும்  தாழ் சுருதியில் எழுப்பப்படும் தவளையின் முணுமுணுப்பை போன்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆங்கில ஆசிரியராக இருந்த Mrs. Del Marmol என்பவர் இது வெறும் இன்னிசை அல்ல எனவும் இதில் சீராக வேறு படுத்தக்கூடிய தெளிவான இராகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Rodney Jonklassb என்பவர் இவ் ஓசையை பற்றி பல பகுதிகளாக பிரித்து நீரிற்குள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ் இசையானது நீரின் ஆழத்தில் தங்கியுள்ளது என கண்டறிந்தார். ஆழமானபகுதியில் அதிக சத்தத்தை உடையதாகவும், இது சங்கீத இராகத்திலிருந்து முணுமுணுப்பான சத்தத்திற்கு மாற்றமடைவதாகவும் மற்றும் நடுப்பகுதியில் முணுமுணுப்பானசத்தத்தை மட்டும் கேட்டக்கூடியதாக இருப்பதாகவும் கண்டறிந்தார்.
இதிலிருந்து இங்கு இரு வகை சத்தம் உள்ளதெனவும், ஒன்று முணுமுணுப்பான சத்தம் மற்றையது மிக ரம்மியமான சத்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் நூலில் இந் நிகழ்வைப் பற்றி ‘நீர் மகள்’என்னும் பாடல் உள்ளது.
இது வரை அனைவரும் இதை ஓர் சத்தமல்ல, இது ஓர் இசை என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இங்கு முக்கிய கேள்வி இச் சத்தத்தை எழுப்புவது எது என்பதாகும். சிலர் இது மீன்களால் நிகழ்வதாக நம்பினார்கள். ஆராய்ச்சியாளர்கள் வாவியின்; அடிப் பரப்பில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒன்று கூடி சத்தத்தை உருவாக்குவதாக கூறுகின்றனர். ஆனால் இங்கு எழுப்பப்படும் சத்தத்தின் இசைத்தரம் கேள்விக்குரியதாக உள்ளது.
இச் சத்தங்கள் பல வகைக்குரியதாக உள்ளது. அதாவது பொப் சத்தம், கிளிக் சத்தம், விசில் சத்தம், உறுமல் சத்தம், முனகல் சத்தம் , முணுமுணுப்புசத்தம், ரீங்காரசத்தம் போன்றவற்றை கொண்டதாக உள்ளது.
மீன்களானது தமது துணையைக்கவர்வதற்காகவும், ஆபத்தை அறிவிப்பதற்காகவும், எதிரியை பயமுறுத்துவதற்காகவும் சத்தத்தை எழுப்பகின்றன.
நீந்தும் மீன்களில் உள்ள சிறு நீர் பையானது பல மீன்களில் ஒலி எழுப்பக் காரணமாகும். அனேகமான மீன்களில் இப் பையானது காற்றினால் நிரப்பப்பட்டு வயிற்றுக் குழியினுள் அமைந்துள்ளது.
குடம்பிகளும், முட்டைகளும் செறிந்த அதிகமாக உணவு கிடைக்கும் பகுதிகளில் மீன்கள் ஒன்று சேரும். அங்கு தொடர்பாடலுக்காக ஒலி எழுப்புகின்றன. விசேடமாக இரவு நேரத்தில் நீரானது இருண்டதாகவும் தெளிவு குறைவானதாகவும் உள்ள போது ஒலி எழுப்பப்படுகின்றது.
Rodney Jonklass என்பவரின் ஆய்வின் போது சத்தம் வரும் இடத்தில் பிரத்தியேகமான மீன் வகை என்று எதையும் அடையாளம் காணவில்லை எனகுறிப்பிட்டார். இவர் red snappers, butter fish, silver bat fish, Estuary Perch, Bream, Ambassis ,Cat fish போன்ற மீன்களின் கூட்டத்தின் இருப்பிடத்தை கண்டறிந்தார். இவர் இயற்கை ஆர்வலரான Mr. SVO Somanadar உடன் இணைந்து இதில் இரு வகையான சத்தம் எழும்புவதைக் கண்டு பிடித்தார்.
முணுமுணுப்பான சத்தம் cat fish, silver bream எனப்படும் மீன்களினாலும், மிக ரம்மியமான சத்தம் Glass fish களினாலும் எழுப்பப்படுவதாகவும் கண்டறிந்தார்கள்.
1761ல் ஆராய்ச்சி செய்ய வந்த ஜப்பானியர்களால் பாடும் மீனானது White Croker   என்பதாகவும் இது காற்றினாலான சிறு நீர்ப்பையைக் கொண்டள்ளதாகவும் கூறினர். இச் சிறு நீர்ப்பையே முணுமுணுப்பான சத்தத்திற்கு காரணம் எனவும் இரு வகையான ஒலியும்  ஒரே வகையான மீனினாலே உருவாக்கப்படுகின்றது எனவும் கூறினார்கள்.
பல வருடங்களாக இங்கு வாழும் உள்ளுர் மக்கள் இச் சத்தம் மொலஸ்காவான oori இனால் உருவாக்கப்படுவதாக நம்பினர். Mr. Emerson Tennet போன்ற ஆரம்பகாலத்து அவதானிப்பாளர்கள் சிலர் ஓடும் நீரில் வெறுமையான சிப்பிகளால் உருவாக்கப்படுவதாக நம்பினார்கள். சுவாமி விபுலானந்தரும் உள்ளுர் மக்களைப் போன்றே ழுழசi இனால் உருவாக்கப்படுவதாக கருத்தைக் கொண்டிருந்தார்.
யுத்தம் மற்றும் சுனாமிக்கு பின்பும் சத்தத்தை எழுப்பும் வாவியின் இத் திறமை நிலைத்து நிற்கின்றது. சமீபகாலத்தில் விஞ்ஞான ஆர்வலர்களினால் (Science Navigators) மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட பதிவுகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிடைக்கக்கூடியதான கட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளில் மிகவும் ரம்மியமான சத்தத்தை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இதற்காக மேலும் பல ஆய்வுகள் தேவையாக உள்ளது. சமீப காலத்தில் BBC வானொலியிலும் இப் பதிவேற்றம் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
இச்சங்கீத சத்தத்திற்கான பெருமை தனி ஒன்றிற்கு சொந்தமில்லை. ஆனால் இது மீன்களிலும், oori போண்ற உயிரினங்களினால் ஏற்படினும்  வாவியில் உள்ள பாறை அடிகளிலும், நீரின் உப்புச்செறிவிலும், நீரின் ஆழத்திலும், பருவகால நீரோட்டத்திலும் தங்கியுள்ளது.

Comments

Popular Posts