ஏவல் - பில்லி சூனியம்

ஏவல் - பில்லி சூனியம்:-





பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.

சிலர், ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள்.

சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும். அந்த வகை மந்திரங்களுக்கு ’அபிசார மந்திரங்கள்’ என்று பெயர். இவை அதர்வண வேதத்தில் உள்ளன. தமிழிலும் பல ஓலைச்சுவடிகளில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. மாந்த்ரீகர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள்.

மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு உடையவை. அவை ஒரு மனிதனின் எண்ண ஆற்றல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. தீய மந்திர உச்சாடனங்களால் தீய அதிர்வலைகள் ஏற்பட்டு அவை ஒரு மனிதனைக் குழப்பி தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இதுதான் ஏவல் எனப்படுகிறது. ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள்.

சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதே, அவனைச் செயல்பட முடியாதபடி முடக்குவதே சூனியம். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே.

பொதுவாக மனச்சோர்வு உற்றவர்களும், தன்னம்பிக்கை குறைந்தவர்களும், கர்மவினைப் பாதிப்புகள் அதிகம் உள்ளவருமே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது.

பில்லி சூனியங்களின் வகைகள்

1. கால் அடி மண்
பில்லி சூனியம் என்பது இரண்டும் ஒன்றாகும். யாருக்காவது தீங்கு விளைவிக்க வேண்டுமானால் சூனியம் செய்வார்கள். குறிப்பிட்ட ஒருவருடைய கால் அடி மண்ணை எடுத்து கொண்டு வந்து அவருடைய பெயருக்கு மந்திரம் செய்து அவருடைய வீடடு கூரையின் மேல் வீசி விட்டால் குறிப்பிட்ட அந்த வீட்டார் இரவில் நித்திரை செய்ய முடியாது. வீட்டின் மீது கல்விழுவது போன்ற சத்தம் வந்து கொண்டே இருக்கும். அத்தோடு காலில் எரிவு புண் ஏற்படுத்தல், சில சமயம் கால் விழங்காமல் போவதும் உண்டு

2. சுடுகாட்டு சாம்பல்
தலைச்சன் பிள்ளையின் மண்டை ஓட்டுச் சாம்பலை எடுத்து அதில் சக்கரங்கள் போட்டு சூனியம் செய்ய வேண்டியவர்களின் பெயர்களை அதில் அடைத்து, மந்திர உச்சாடனம் செய்து குறிப்பிட்டவர்களின் வீட்டில் போட்டு விட்டால் அங்கு ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டோ, குத்திக் கொண்டோ பிரிந்து விடுவார்கள். அவ்வீட்டில் குடியிருக்க முடியாதவாறு வெட்டுப்பலி, குத்துப்பலி உருவாகி விடும். இதை உணவில் கலந்து கொடுத்தால் நோய்கள் உருவாகும்.

3. முட்டை
ஒரு மு்டையை வைத்து மந்திர பூஜை செய்து குறிப்பிட்டவரின் வீட்டிலோ அல்லது வீட்டு வாசலிலோ உடைத்து விட்டால் அஙகு பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் பலவிதமான மோசங்கள் உண்டாகும்.

4. எந்திரம்
செப்புத் தகட்டில் பெயர் பதித்து மந்திர உச்சாடனம் செய்து எந்திரத்தை எரியும் அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டு வந்தால் பெயருடையவரின் சரீரங்களில் எரிவு உண்டாகி வேதனை அடைவர்.

5. சுண்ணாம்பு
சிறிது சுண்ணாம்பை ஒரு சிறிய போத்தலில் அடைத்து இரவில் யாருக்கும் தெரியாமல் முச்சந்தியில் வைத்து அதிகாலையில் யாரும் அறியாதபடி அதை கொண்டு வந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயர்களின்படி மந்திரம் செய்து வீட்டிலோ சுவர்களிலோ அல்லது வேறு எதிலாவதோ பூசிவிட்டால் இரண்டு குடும்பங்களுக
சண்டைகள் ஏற்பட்டு குழப்பங்கள் உருவாகும்.

6. எலுமிச்சை
சில எலுமிச்சைப்பழம் கொண்டு வந்து அதில் பெயர்களை வைத்து மந்திரம் செய்து வீடுகளில் போட்டு விட்டால் அல்லது வீடுகளில் புதைத்து விட்டால் பிரச்சினைகள் குழப்பங்கள் உருவாகும்.

7. பொம்மை
சந்தனக் கட்டையில் ஒர் பொம்மை செய்து சரியாக அங்கங்கள் பதித்து சிகப்பு, கருப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்கரித்து, எதிரியின் பெயரை பொம்மைக்கு வைத்து, மந்திர பூஜை செய்து, பத்திரமாக வைத்துக்கொண்டு அதன் சரீரத்தில் சிறிய ஊசியால் குத்தினால் எதிரிக்கு அந்தந்த இடங்களில் ஊசி குத்தப்படும். எந்தெந்த அவயவங்களில் குத்துகின்றோமோ அந்த அவயவங்கள் வேதனை கொடுக்கும். இந்த பொம்மையை மாவிலும் செய்யலாம்.

பரிகாரம்:

உங்கள் ஜாதகத்தில் ராகு/கேது திசையோ/புத்தியோ, நடந்தால் இது போன்ற மாந்திரிக கோளாறுகள் பாதிக்க இடம் உண்டு.

அதனால் ராகு கேது திசையோ/புத்தியோ நடந்தால் நரசிம்ம வழிபாடு செய்யலாம்.

கந்தசஷ்டி கவசம் போன்ற நூல்கள் எல்லாம் நம்மைக் கவசம் போல பாதுகாப்பதற்காகவே இருக்கின்றன. இவற்றைப் தினமும் பாராயணம் செய்தால், எந்த தீயசக்தியும் எந்த ரூபத்திலும் நம்மை அணுகுவதில்லை.

Comments

Popular Posts