கரையாக்கன் முறை மீன்பிடி

இதன் பெயர் கரையாக்கனை அழைத்து மீன் பிடித்தல் என அழைக்கப்படும். இதில் மீன்பிடி கலை மட்டுமல்லாது மந்திரமும் கலந்து மீனை பிடிக்கிறார்கள். கரையாக்கன் என்பது ஓர் ஏவல்களுக்கு வேலைசெய்யும் ஓர் சக்தி ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.(வாய்மொழியாக அறிந்த கதை). வழமை போல் தோணியில் சென்று வலை வீசி தான் மீனை இம்முறையிலும் பிடிப்பர். வலையை வீசும் முன்னர் கரையாக்கனை மந்திரம் சொல்லி அழைத்து விட்டு வலையை வீசுவர். அப்போது வலையில் அப்பகுதியில் உள்ள மீன் அனைத்தும்
வழமைக்கு மாறாக வந்து பிடிபடும். பின்னர் பிடிபட்ட மீனில் ஒன்றை எடுத்து கரையாக்கனுக்கு செய்த வேலைக்கு கூலியாக கொடுத்து கரையாக்கனை அனுப்பி விடுவார்கள்.
மீனவர் ஒருவர் கரையாகன் பற்றி கூறிய கருத்து அவரது மொழிநடையிலே  பின்வருமாறு 

நல்லா மீன் தரும் , தோணிக்கணக்கில் தரும், அது கரையாக்கனை மந்திரத்தால் அழைக்கிறவங்க. எங்க வெச்சாலும் மீன் தான் படும். மீன் இல்லாட்டி மீன் இருக்கிற இடத்துக்கு எம்மை கொண்டு போகும். எந்த நாளும் மீன் படும் ஆனால் எந்த நாளும் அதுக்கு சாப்பாடு குடுக்கல்ல என்றால் நம்மளையே சாப்பிட்டு போட்டிடும்.முதுகுல அடிச்சி ரெத்தத்தை குடிக்கும். சாப்பாடு குடுக்கல்ல எண்டா 12 மணிக்கு நம்மள எழுப்பிட்டு வரும். ஆனால் இதால மீன் வாங்கி சாப்பிடுறவங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது. மீனவருக்கு தான் வாழ்நாள் முழுதும் பிரச்னை தொடரும்.
கரையாக்கன்  என்றால்  யார்? எப்படி இதை அழைப்பது ? போன்ற மேலதிக விபரங்களுக்கு இந்த பக்கத்தை பார்வையிடவும் 


Comments

Popular Posts