பாரம்பரிய மீன்பிடித்தொழினுட்பம்
நாம் பயன்படுத்திய பாரம்பரிய மீன்பிடி தொழினுட்பங்களில் கரப்பு பயன்படுத்தி மீன்பிடித்தலும் ஒன்றாகும். இதனை இலங்கையில் மட்டக்களப்பு தேத்தாத்தீவில் தற்போதும் பயன்படுத்துகிறார்கள். குழுவாக சென்று மீன் பிடிக்கும் முறையாக இது காணப்படுகிறது. ஒரு குழுவில் 12-20 பேர் வரையில் காணப்படுவர். ஆறு,குளம்,குட்டைகளில் மீன் பிடிப்பதட்காக மட்டும் இதனை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செய்வதட்காக ""முள்புல்லாந்தி"" எனும் தாவர தண்டு பயன்படுத்தப்படுகிறது. ஓர் கரப்பு செய்வதற்கு 105 தண்டுகள் தேவைப்படும். செய்த கரப்பு ஒன்று 2000 ரூபாய் வரை விலை போகும்.
- மண்டா
ஆறு,கடல் இரண்டிலும் பயன்படுத்தப்படும் பாரம்பரிய நுட்பமுறைகளில் இதுவும் ஒன்று. இதில் மீனை ஏமாற்றிப்பிடித்தல் எனும் தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஆறுகளில் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் ஓரு தோணியில் இருவர் செல்வர் அப்போது முன்னே உள்ளவர் சவளால் வலிக்க பின்னே உள்ளவர் கையில் மண்டாவுடன் தோணியின் பின்புறம் மீனை கவர்ந்திழுப்பதட்காக விசேடமாக உருவாக்கப்பட்ட மீனஒத்த அமைப்பினை நோக்கியவண்ணம் மண்டாவை மீனை நோக்கி வீசுவதட்க்கு ஆயத்தமாக எழுந்து நின்றுகொண்டிருப்பார்.
மீனானது தோனியின் பின் உள்ள வால் போன்ற அமைப்பினை கண்டு மீன் தான் செல்கிறது என ஏமார்ந்து பெரிய மீனான தோணியை பின்தொடரத்தொடங்கும் அப்போது அம்மீன் நீரின் மேல் மட்டத்திட்க்கு வரும் போது மீனவர் மண்டாவால் எறிந்து பிடிப்பர்.
மண்டாவால் எறிந்து மீன் பிடிக்கும் இன்னும் ஓர் தொழினுட்பமாக மீன் வரும் வரை ஓர் நிலையான பகுதியில் காத்திருந்து இரையை நீரினுள் எறிந்து அந்த இரையை எடுக்க வரும் மீன்களை மாண்டாவால் எரிந்தும் பிடிப்பர். இங்கு நிலையான பகுதி என குறிப்பிடப்படுவது நீர்நிலையில் உள்ள கல் அல்லது மீன் பிடிப்பதட்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
பொதுவாக மண்டாவினால் எறிந்து பிடிக்கப்படும் மீன் வகையாக ""கொடுவா"" குறிப்பிடப்படும்.நாம் பயன்படுத்தும் மண்டாவின் அலகின் அளவினை கொண்டு மீனின் அளவு மாறுபடும்.
நடுத்தரமான அளவு மண்டாவல் எறிந்து பிடிக்கப்படும் மீன் பொதுவாக 5-6Kg இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அத்தாங்கு
மீன் பிடிக்கும் இன்னும் ஓர் முறையாக அத்தாங்கு முறையும் உள்ளது. இது ஆறுகளை விட குளங்களில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதாங்கில் கட்டபடும் வலையின் கண் அளவை பொறுத்து பிடிபடும் மீனின் அளவும் மாறுபடும்.
கிழக்கில் கன்னங்குடா, கல்லாறு பகுதிகளில் இராலின் இளநிலை பருவமா கூனியை பிடிப்பதற்கு இதனை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் அத்தாங்கில் கட்டப்ட்டுள்ள வலையின் கண் மிகவும் சிறியதாக இருக்கும். இதனை "கூனி வடித்தல்" என்னும் சிறப்பு பெயர் கொண்டும் அழைப்பர்
- மீன் கூடு வைத்தல்
- ஓலையால் கட்டுதல்
- கொத்துப்போடுதல்.
- கரையாக்கன் முறை
Comments
Post a Comment