கிடுகு இழைத்தல்

தென்னை மட்டையை தெரிவு செய்தல். 
  • மரத்திலிருந்து விழும் வண்டுகள் கடிக்காத, விழும்போது உடையாத, பலமான மட்டைகள் இழைத்தலுக்காக தெரிவு செய்யப்படும்.
தென்னை மட்டையை நீரினுள் ஊற விடல்.
  • விழுந்த ஓலை மட்டையை எடுத்து முன்னால் உள்ள வலுவற்ற பகுதியையும் பின்னால் உள்ள சிறிய வலுவற்ற பகுதிகளையும் வெட்டி நீக்கிய பின்னர் ஓலை மட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக கட்டி ஆற்று நீரினுள் நிலையான பிடிமானம் ஒன்றுடன் இணைத்து கட்டி விட வேண்டும். 24 மணித்தியாலம் முழுமையாக ஊற விட வேண்டும்.
தென்னை மட்டையை வெளியே எடுத்து இளைத்தல். 
  • நன்றாக நீரில் ஊறிய ஓலையை வெளியே எடுத்து அதனை நடுவால் பிளந்து 2 பகுதிகளாக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக இழைக்க வேண்டும்.
சேமித்தல்
  • இழைத்த மட்டைகளை உலர்வான இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்
விற்ப்பனை செய்தல்.
  • ஓர் சோடி மட்டை 30/= ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்
கிடுகு பயன்படும் இடங்கள்.
  • வீட்டின் கூறையாக பயன்படும்.
  • வேலிக்கு மறைப்பாக பயன்படும்.
  • அலங்கார வேலைகளுக்கு பயன்படும்.
  • பாரம்பரிய வைபவங்களில் பயன்படும்.
கிடுகு பயன்பாட்டின் நன்மைகள்
  • குளிர்ச்சி
  • இயற்கை சேதப்பொருள்
  • செலவு குறைவு
  • தற்காலிக பாவனைக்கு மிகவும் உகந்தது.





Comments

Popular Posts